Thursday, June 21, 2012

பலருக்கு முன் எப்படி பேசுவது?


தங்களுக்குள் தைரியமாக பேசிக்கொள்ளும் நாம், பலர் முன்னால் நின்று பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் தயங்குகிறோம், பயப்படுகிறோம், பதற்றப்படுகிறோம்.

இப்போதெல்லாம் பலர் முன் பேசும் திறனை தான், வேலைக்கான நேர்காணல்களிலும், படிப்புக்கான நுழைவு தேர்வுகளிலும் மிக முக்கியமாக எதிர் பார்க்கிறார்கள். எனவே அதற்கு உதவும் வகையில்,பலருக்கு முன் தெளிவாக, புரியும் வகையில் பேச சில பொதுவான உளவியல் ஆலோசனைகள்:

பலருக்கு முன் பேசுவதற்கு முன்னர்:
  • முதலில் யாருடன் பேசப்போகிறீர்கள், அவர்களின் கல்வித்தகுதி, புரிந்து கொள்ளும் திறன் போன்றவை பற்றி முன்னரே தெரிந்து வைத்திருக்க வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு ஏற்ற வகையில் பேச முடியும்.
  • தலைப்பு என்ன? ஏன் அந்த தலைப்பை தேர்தெடுக்கிறார்கள்?, என்ன தேவைக்காக பேச சொல்கிறார்கள், எவ்வளவு நேரம் கொடுக்கப்படும் என்பதையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் 
  • தலைப்பிற்கு சம்மந்தமான கதைகள், எடுத்துக்காட்டுக்கள், சொந்த அனுபவங்கள், மற்றவர் வாழ்வில் நடந்தவை, ஜோக்குகள், புள்ளி விபரங்கள் போன்றவற்றை சேகரிக்கவும்
  • நாம் பேசப் போவதை முன்னரே யோசித்து, திட்டமிட்டு, ஒரு சரியான வரிசையில் தெரிவிக்க வேண்டும். அதற்காக பவர் பாயிண்ட்-லோ (அ) ஒரு பேப்பரிலோ, வரிசையை நினைவு கொள்ளும் பொருட்டு எழுதி வைத்துக்கொள்ளவும்
  • பேசி பழக்கமில்லாத பட்சத்தில், நன்றாக பயிற்சி செய்யவும். அப்போது தான், பலர் முன் பேசுவது என்பது உங்கள் பழக்கங்களில் ஒன்றாகி இருக்கும். பொதுவாக நாம் பழக்கப்பட்டவற்றை செய்யும் போது நமக்கு பதற்றம் இருக்காது.

பேசும் போது:
  • பேசத்தொடங்கும் போது, உங்களது பேச்சின் குறிக்கோள்கள் என்னென்ன என்பதை சொல்ல வேண்டும், பேச்சின் முடிவில் அந்த குறிக்கோள்களை அடைந்து விட்டோமா என்று பார்க்க வேண்டும்.
  • உங்கள் மொழித்திறனை காண்பிக்கும் வகையில் இல்லாமல், அவர்களுடைய புரிந்து கொள்ளும் திறனுக்கு ஏற்ப பேச வேண்டும்
  • அவ்வபோது கேட்பவருக்கு புரிந்தாதா என்று பார்த்துக் கொள்ள வேண்டும்
  • வளவளவென்று இல்லாமல் சுருக்கமாக, அதே நேரத்தில் கருத்து செறிவு குறையாமலும் பேச வேண்டும்
  • மிக அதிகமான தகவல்களை குறைவான நேரத்தில் கொடுத்தால் யாராலும் எடுத்துக்கொள்ள முடியாது. எனவே ஏதோ ஒரு காரணத்தால், நீங்கள் பேசும் நேரம் குறைக்கப்பட்டு இருந்தால், அதேற்கேற்றவாறு முக்கியமானவைகளை மட்டுமே பேசி முடிக்கவும்
  • ஒரு கான்சப்ட்டை பற்றி பேசி முடித்தவுடன் அதன் சுருக்கத்தை சொல்ல வேண்டும்.
  • வாய் பேசும் போது உடலும் பேச வேண்டும். உங்கள் குரலும், உடலும் கம்பீரமாக இருத்தல் நலம்
  • ஒரு சீரீயசான விஷயம், ஒரு மேம்போக்கான விஷயமென்று கலந்து கலந்து சொல்ல வேண்டும்
  • கடைசியில் உங்கள் பேச்சிலிருந்து என்ன கற்றுக்கொண்டார்கள் என்று பங்கேற்பாளர்களை கேளுங்கள்,அவர்களுக்கு சொல்ல உதவுங்கள்,அதன் மூலம் உங்கள் மொத்த பேச்சின் சுருக்கத்தையும் சொல்லுங்கள்
  • ஒரே இடத்தில் நிற்காமல், அங்கும் இங்கும் நடந்து எல்லோரையும் பார்த்து பேசுங்கள்
  • ஏற்ற இறக்கங்களுடன் பேசுவது நலம்
  • சிலர் தூங்குகிறார்கள் (அ) கவனிக்கவில்லை எனில், அவர்களுக்கு அருகில் சென்று, எல்லோருக்கும் பேசுங்கள்.  நீங்கள் பக்கத்தில் செல்லும் போதே அவர்கள் புரிந்து கொள்வார்கள்
  • ஏதாவது கேள்விகள், சந்தேகங்களுக்கென நேரம் ஒதுக்கி, அப்படி ஏதாவது இருந்தால், கேட்டு தெளிவு பெற உதவுங்கள்

பேசி முடித்த பின்:
  • உங்களை கஷ்டப்படுத்தாது எனில், எவ்வாறு பேசினீர்கள் என்று மற்றவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
  • உங்களுக்கே தெரிகிறது, இன்னும் நன்றாக பேசி இருக்கலாம் என்றால், அதனை ஏற்றுக்கொண்டு அடுத்த முறை இன்னும் நன்றாக பேச தயாராகுங்கள்
  • பேசி முடித்து விட்டதை எண்ணி கவலைப்படுவதால், அடுத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்த முடியாமல் போய் விடலாம். ஆகவே வருத்தப்படும் நேரத்தை குறைத்துக் கொள்ளுங்கள்
இந்த ஆலோசனைகள் எல்லாம் எனக்கு தெரியும். ஆனால் செயல்படுத்த முடியவில்லை என்றால் அதனை ஏற்றுக்கொண்டு தக்கவரின் உதவியை நாடுவது நலம்!

5 comments:

  1. very good tips thank you
    Regards,
    CT.Nachiappan

    ReplyDelete
  2. அருமையான பதிவு, மக்களக்கு மிகவும் தேவையான தகவல்கள்

    ReplyDelete
  3. அருமையான பதிவு மக்களுக்கு மிகவும் பயணுள்ள தகவல்

    ReplyDelete