Sunday, October 2, 2011

நடிகர் சிவக்குமாரின் என் செல்லக்கண்மணிகளுக்கு

தொலைகாட்சியில் சன் மியூசிக், இசையருவி, ஜெயா பிளஸ், எஸ் எஸ் மியூசிக், ராஜ் மியூசிக் என பாடல்களை மட்டுமே விரும்பி பார்க்கும் நான் அன்று விஜய் டிவியை தற்செயலாய் பார்த்தபோது, சிவக்குமாரின் என் செல்லக்கண்மணிகளுக்கு என ஒரு நிகழ்ச்சி ஓடிக்கொண்டு இருந்தது.



நடிகர் சிவகுமாரின் மேல் இருந்த மரியாதையில், விளம்பர படையெடுப்புகளையும் பொருட்படுத்தாது, அந்த நிகழ்ச்சியை பார்த்தேன். அதன் பல பாகங்கள் போயிருக்கும் என நினைக்கிறேன். அது ஒரு மறு ஒளிபரப்பாக இருக்க வேண்டும். ஏதோ ஒரு பெண்கள் கல்லூரியில் பெற்றோர்கள், மாணவிகளுக்கு மத்தியில் அவர் பேசிக்கொண்டிருந்தார். குறைவான நேரத்தில் என் மனம் உள்வாங்கியவற்றை இங்கு எழுதியிருக்கிறேன்.

இதை நான் வெகு நாட்களுக்கு முன்பே எழுதி விட்டேன். இப்போது தான் வலைப்பூவில் வெளியிடும் நேரம் வந்திருக்கிறது போலும்!

நீங்கள் எல்லோரும் என் குழந்தைகள் தான். நீங்கள் ஒவ்வொருவரும் என் பிள்ளைகள் சூர்யா, கார்த்திக், பிருந்தா தான். நன்றாக பேசி உங்களிடமிருந்தது கைத்தட்டு வாங்க வேண்டுமென்றோ, பெயர் புகழ் வாங்க வேண்டுமென்றோ நான் இங்கு பேச வரவில்லை. உங்களின் அப்பாவாய் சில உண்மைகளை பேச வந்திருக்கிறேன். இப்பொழுது எல்லோரும் நன்றாக படிக்கிறீர்கள், படித்து முடித்த பிறகு கால் சென்டர் கம்பெனிக்கு வேலைக்கு போவீர்கள் இல்லையா? உங்களை உங்கள் கல்லூரிக்கே வந்து தேர்வு செய்கிறார்கள் இப்போதெல்லாம். உங்களில் நிறைய பேருக்கு தெரிந்திருக்குமோ என்னவோ, சில ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு கால் சென்டர் கம்பெனியில், சாக்கடை அடைத்துவிட்டது, வந்து சுத்தம் செய்யவும் என்று கார்பரேஷனுக்கு தெரியப்படுத்தினார்கள். சாக்கடை ஏன் அடைத்திருக்கிறது என்று பார்த்தால், ஆயிரகணக்கில் காண்டம்!

நான் இளைய தலைமுறையினரை குற்றம் கூறவில்லை. அந்த கம்பெனியையும் குற்றம் கூறவில்லை. இரவு பகல் பார்க்காமல் வேலை பார்க்கிறார்கள். இரவு நேரத்தில் அனைவருக்கும் வரும் உணர்வு அது; வேலையில் கவனம் செலுத்தமுடியாது தான். ஆகவே அந்த கம்பெனி தன் வேலையாட்களுக்கு காண்டம் வழங்கியிருக்கிறது.


பெற்றோர்களே, இது உங்களுக்கு அதிர்ச்சியாய் இருக்கலாம். அதற்காக உங்கள் பிள்ளைகளை கால் சென்டர் வேலைகளுக்கு அனுப்பக்கூடாது என்று சொல்லவும் வரவில்லை. அங்கு தான் அதிகம் சம்பளம் கிடைக்கிறது. நன்றாக படித்து வீட்டில் உட்கார முடியுமா? அதற்கு தான் குழந்தைகளே ஒன்று சொல்கிறேன். வேலையில் சேர்ந்த ஆறு மாதத்தில், பெற்றோர்களிடம் சொல்லி, ஒரு நல்ல பையனை பார்த்து திருமணம் செய்து கொள்ளுங்கள். இல்லையென்றால் வேலை பார்க்கும் இடத்திலேயே, ஒரு பையன் நன்றாக இருக்கிறான், நல்ல குணமும் இருக்கிறது என்றால் அவனை காதலித்து திருமணம் செய்து கொள்ளுங்கள். உங்கள் பெற்றோர் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். அதை பற்றியெல்லாம் கவலைப்படாதீர்கள். ஒவ்வொரு இரவும் ‘அப்படி’ கழிவதை விட, உங்கள் பெற்றோர் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்து கொள்வது எவ்வளவோ மேல்.


பெற்றோர்களே! நான் அடித்து சொல்கிறேன், இன்னும் 50 வருடங்களில் காதல் திருமணங்கள் மட்டுமே இங்கு நடக்கும். அதை நீங்கள் கண்கூடாக பார்க்க போகிறீர்கள். நாம் நம் காலத்தில் செய்த அதே விஷயங்களை மார்டனாக செய்கிறார்கள்.

பல ஆண்டுகள் நடிகனாய் இருந்து, பல கதா நாயகிகளை கட்டிபிடித்து காதல் செய்து நடித்திருக்கிறேன். பலப்பல சபலங்களை தாண்டி வந்து இப்போதும், ஒரே மனைவியுடன் சந்தோஷமாக வாழ்கிறேன். ஆகவே இந்த விஷயங்களைப் பற்றி பேச எனக்கு முழு தகுதி உள்ளது.
ஒரு விடுமுறை காலத்தில் என் குழந்தைகள், பக்கத்து வீட்டு ஆண் குழந்தைகளெல்லாம் என் வீட்டிற்கு விளையாட வந்திருந்தன. அவர்கள் எல்லோருக்கும் 13, 14 வயது இருக்கும். என் மனைவி சுத்தம் செய்யும் போது, பிளே பாய் புத்தகம் ஒன்று டிராயரில் இருப்பதை பார்த்துவிட்டு அதிர்ச்சியாய் என்னிடம் கூறினாள். நான் சொன்னேன் "நான் அந்த காலத்தில் பெண்களை நிர்வாணமாய் ஒவியம் வரைந்தவன், இந்த காலத்தது பசங்க இப்படி புத்தகம் பார்ப்பதில் ஆச்சிரியம் இல்லை" அடுத்த நாள், அந்த எல்லா ஆண் பிள்ளைகளையும் வரிசையாய் உட்காரவைத்து, நான் வரைந்த நிர்வாணப் படங்களை எடுத்து, ஒவ்வொரு உறுப்பினையும் காண்பித்து இப்படி கூறினேன். “இதில் தான் நீங்கள் குழந்தைகளாய் இருக்கும் போது, பால் குடித்தீர்கள். இந்த தொப்புளில் தான் நீங்கள் தாயின் வயிற்றுக்குள் பிணைக்கப்பட்டு இருந்தீர்கள். இந்த பெண்ணுறுப்பின் வழியாகத் தான் நீங்கள் உலகிற்கு வந்தீர்கள்.”


குழந்தைகளுக்கு எந்த விஷயத்தையும் நல்ல முறையில் சொல்லிக்கொடுக்கும் போது அவர்கள் நிச்சமாய் நல்ல விதமாக எடுத்துக்கொள்வார்கள்.

No comments:

Post a Comment