Friday, December 2, 2011

கடவுள் பாதி! மிருகம் பாதி!


யாரும் முழுதாய் நல்லவனும் கிடையாது; முழுதாய் கெட்டவனும் கிடையாது; நாம் அனைவரும் நல்லவனும், கெட்டவனும் கலந்த கலவைகள். பலர் வாழ்வை உள்நோக்கி பார்த்த உளவியலாளனாகவும், தனிமனிதனாக என் சொந்த அனுபவத்திலும் நான் இதை சொல்கிறேன்.
இதைப் படிப்பவர்கள் தங்களது குண நலன்களை உற்று நோக்கிப்பார்த்தால் இது உண்மை என நிச்சயம் விளங்கும். நான் சிலருக்கு நல்லவனாகவும், சிலருக்கு கெட்டவனாகவும் என் முகத்தை காண்பித்திருக்கிறேன்.

செயல் விளைவு கோட்பாடுகளுக்கு ஏற்றவாறு, என்னை சுற்றி இருப்பவர்கள் அவர்களது நல்ல, கெட்ட முகங்களை எனக்கு காண்பிக்கிறார்கள். ஒரே மனிதர் எனக்கு ஒரு நாளில் நல்லவராக தெரிகிறார்; மற்றோரு நாளில் கெட்டவராக தெரிகிறார். தீதும் நன்றும் பிறர் தர வாரா அன்றோ!

ஆகவே நல்லவர்கள் கெட்டவர்கள் என மனிதர்களை வகைப்படுத்துவதை விடுத்து, மனிதன் என்பவன் நல்லவனும், கெட்டவனும் கலந்த கலவை என நம்பத் தொடங்குவோம்.


மற்றவர்கள் ஏன் அப்படி நடந்து கொள்கிறார்கள் என்று விமர்சனம் செய்வதை விடுத்து, முடிந்த வரை நாம் நமது நல்ல முகத்தை மற்றவருக்கு காண்பிப்போம். 

No comments:

Post a Comment