Saturday, December 31, 2011

இன்னா செய்தாரை??


உங்களால் மற்றவருக்கு அதிக பட்சம் கொடுக்கமுடிவது அன்பும், நம்பிக்கையுமே! அந்த அன்புக்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமாய் இருப்பது மற்றவரின் கடமை. அதிலிருந்து அவர்கள் விலகினால் அது அவர்களின் குற்றம். உங்களின் குற்றமல்ல!

ஷிவ் கெரா, ‘யூ கேன் வின்என்ற புத்தகத்தை எழுதியவர் கூறினார், “ஒரு முறை நீங்கள் ஏமாந்தீர்களானால், அது மற்றவரின் குற்றம். ஏனெனில் அவரே உங்கள் நம்பிக்கையை பொய்யாக்கினார். இரண்டாவது முறை அதே மனிதரிடம் நீங்கள் ஏமாந்தீர்களானால், அது உங்கள் குற்றம். ஏனெனில் அவர் தான் உங்களை ஒரு முறை ஏமாற்றிவிட்டார் என்று தெரிந்தும் அவருக்கு ஏன் உங்களை ஏமாற்றும் வாய்ப்பை கொடுத்தீர்கள்?

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் என்று திருவள்ளுவர் கூறுகிறார். அதற்காக உங்களை ஏமாற்றியவருக்கு, மீண்டும் ஏமாற்ற வாய்ப்பு தர வேண்டும் என்று அவசியமில்லை. வேண்டுமானால் வேறு ஏதாவது உதவி செய்யலாம். அப்போதும் மிக கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

பணிவு, மன்னிப்பு, அன்பு, கருணை, இரக்கம் போன்றவை நம் நாட்டின் பாரம்பரியமாம். அதை கடைபிடிக்கிறேன் என்ற பெயரில் பலரும் நம்மை ஏமாற்றுகிறார்கள். ஏமாறுவதற்கா நாம் இந்த விழுமியங்களை கடைபிடிக்கிறோம்? இந்த நாட்டில் அரசியல்வாதிகளும் ஊழல் வியாதிகளும் இதை நன்றாக பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

தனிப்பட்ட வாழ்விலும், பொது வாழ்விலும் மற்றவர்கள் மீது நம்பிக்கை கொள்ளுங்கள். நீங்கள் அவர்கள் மீது வைக்கும் நம்பிக்கை அவர்கள் குற்றங்கள் செய்திருப்பின் அவர்களின் மனசாட்சியை குறுகுறுக்க செய்யட்டும். உங்கள் அன்புக்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமில்லாமல் அவர்கள் செயல்பட்டால், உங்கள் உள்ளுணர்வு நிச்சயம் எதையாவது சொல்லும், அதற்கு முக்கியத்துவம் கொடுத்து உங்களை காப்பாற்றிக்கொள்ளுங்கள்.

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! :)


2 comments:

  1. சிந்திக்கும்விதமாக சொன்னீர்கள் நண்பா..

    ReplyDelete