Friday, April 8, 2011

எப்போதும் மகிழ்ச்சி??

நம் வாழ்க்கையில் எப்போதுமே மகிழ்ச்சி பொங்க வேண்டுமென, நாம் அனைவரும் விரும்புகிறோம். அது அவ்வளவு எளிதில் நடந்துவிடுவதில்லை. நிறைய நேரங்களில் வாழ்க்கை என்பது மகிழ்ச்சியும் துயரமும் கொண்டது என நாம் நம்மை சமாதானப்படுத்திக் கொள்ளவேண்டியிருக்கிறது. நம் துயரத்துக்கான காரணங்களை பரிசீலனை செய்து, கடைசியில் நம் மீதோ அல்லது மற்றவர் மீதோ தவறு இருப்பதாக முடிவுக்கு வருகிறோம்.

வாழ்வில் மகிழ்ச்சியாய் இருக்க என்ன செய்ய வேண்டும் என நான் சிந்திதேன். இக்கேள்வி புத்தர், காந்தி போன்ற மகான்களால் கேட்கப்பட்ட கேள்வியாம்! தீடீரென பள்ளிப்பருவத்தில் படித்த தமிழ் செய்யுள் ஞாபகம் வந்தது. கணியன் பூங்குன்றனார் எழுதிய "யாதும் ஊரே யாவரும் கேளீர்" எனத் தொடங்கும் அந்த பாடலின் இரண்டாம் வரி "தீதும் நன்றும் பிறர் தர வாரா!"

இந்த இரண்டாம் வரி உணர்த்தும் பொருளை ஏற்றுக் கொண்டால், நாம் ஏன் துயரங்களில் வீழ்கிறோம்? என்ற கேள்விக்கு தெளிவானதோரு விடையை நம்மால் அளிக்க முடியும். மற்றவர்களை குற்றம் சொல்வதையும், கோபபட்டு, நம் சோகத்தை அதிக படுத்துவதையும் விட்டுவிட முடியும். நான் என்ன உனக்கு செய்தேன்? நீ ஏன் எனக்கு இப்படி செய்கிறாய்? என்ற கேள்விகளும் காணமல் போகும்.

எனவே துயரம் ஏற்படுவது மற்றவர்களால் அன்று; நம் செயல்களால் மட்டுமே! யாரோ அறிமுகமில்லா ஒருவர் நம்மை துயரத்தில் ஆழ்த்தச் செய்வது நாம் யாருக்கோ செய்த தவறுகளை சமன்படுத்த பயன்படும் கருவி. இது நியூட்டனின் மூன்றாம் விதியான "எந்த ஒரு விசைக்கும் அதற்கு சமமான எதிர்விசை உண்டு" என்பதை ஒத்திருக்கிறது.

ஒருவரின் மனசாட்சிக்கு தவறு எனப்படுவது, மற்றொருவரின் மனசாட்சிக்கோ சரி எனப்படுகிறது. ஏனெனில் மனசாட்சி என்பது ஒருவரின் தனித்தன்மையான அனுபவங்கள், பிரச்சனைகள், இயல்புகள் என பல்வேறு விஷயங்களை உள்ளடக்கியது.

என்னைப்பொருத்தவரை 'மனசாட்சி'-க்கு எதிராக செய்யப்படுவது மட்டுமே 'தவறு'. பல நேரங்களில் நாட்டின் சட்டங்கள், சமய மற்றும் சாதிய சட்டங்கள் கூட நன்மை-தீமையை சரியாய் பகுக்கத் தெரியாமல் தோற்றுப்போகின்றன. ஆனால் மனசாட்சி மிகச் சரியாக நன்மை தீமைகளை பகுத்தறியும் தன்மை கொண்டது என நான் உறுதியாய் நினைக்கிறேன்.

ஆகவே "தீதும் நன்றும் பிறர் தர வாரா!" என்ற உண்மையை உணர்ந்து மனசாட்சிக்கு இணங்க வாழ்க்கை நடத்தினோமானால், நம் அனைவரின் வாழ்விலும் நிச்சயம் மகிழ்ச்சி பொங்கும்!!

No comments:

Post a Comment